தேநீர் விருந்தில் ஆளுநர் தமிழிசை பேச்சு... முதல்வர் ரங்கசாமி செம ஹேப்பி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

தேநீர் விருந்தில் ஆளுநர் தமிழிசை பேச்சு... முதல்வர் ரங்கசாமி செம ஹேப்பி!

 தேநீர் விருந்தில் ஆளுநர் தமிழிசை பேச்சு... முதல்வர் ரங்கசாமி செம ஹேப்பி!



மக்களுக்கு பயன்தரும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த உறுதுணையாக இருப்பேன் என்று புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறினார்.
புதுச்சேரி மாநில 15 ஆவது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததை அடுத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
ஆளுநர் தமிழிசை தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்திரராஜன் பேசும்போது, 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது முதல் பட்ஜெட் கூட்டத்தொடரை நிறைவு செய்திருக்கின்றது. இதில் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை அறிவித்திருக்கின்றது.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என்ற முறையிலும், புதுச்சேரி மக்கள் மீது அக்கறை கொண்டவர் என்பவர் வகையிலும் மக்களுக்கு பயன்தரும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த உறுதுணையாக இருப்பேன்' என்று தமிழிசை பேசினார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, 'புதுச்சேரி மீது அக்கறை கொண்ட துணை நிலை ஆளுநர் இருக்கும் வரை புதுச்சேரி நல்ல முன்னேற்றம் அடையும். தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து திடங்களையும் செயல்படுத்தும்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad