அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சிக்கல்; ஆன்லைன் வகுப்புகள் அவ்வளவுதானா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சிக்கல்; ஆன்லைன் வகுப்புகள் அவ்வளவுதானா?

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சிக்கல்; ஆன்லைன் வகுப்புகள் அவ்வளவுதானா?

தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயமில்லை. வீட்டிலிருந்த படியே டிஜிட்டல் வகுப்புகள் மூலம் கல்வி கற்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. நேரடி வகுப்புகளில் மாணவர்களின் வருகை 35 சதவீதமாகத் தான் உள்ளது. அதேசமயம் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் வருகைப் பதிவேடு சற்று அதிகமாக காணப்படுகிறது. இதற்கிடையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து தூர்தர்ஷன் யாதகிரி மற்றும் TSAT சேனல்களில் பாடம் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

டிஜிட்டல் முறையில் பாடங்கள்

மீண்டும் எப்போது டிஜிட்டல் வகுப்புகள் தொடங்கும் என்று தெரியாததால் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதேசமயம் ரெக்கார்ட் செய்யப்பட்ட பல்வேறு பாடங்கள் TSAT ஆப்பில் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. இவற்றை அணுகுவதிலும் மாணவர்களுக்கு சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் காலையில் வேலைக்கு சென்றுவிட்டால் மீண்டும் இரவு தான் வீடு திரும்புகின்றனர்.

சிக்கலில் தவிக்கும் மாணவர்கள்

அவர்களிடம் தான் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. எனவே அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதுமட்டுமின்றி எந்தப் பாடத்தில் இருந்து கற்க தொடங்குவது என்பதிலும் குழப்பம் நீடிப்பதாக பல்வேறு மாணவர்கள் கூறியுள்ளனர். சில மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்களோ, இணைய வசதிகளோ இல்லை. அவர்கள் மேலும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக அரசுப் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர் எம்.பவன் என்பவர் கூறுகையில், டிடி சேனலில் தான் தொடர்ச்சியாக பாடங்களை கவனித்து வந்தேன்.

பல்ளிக் கல்வித்துறை விளக்கம்

ஆனால் கடந்த ஒருவாரமாக பாடங்கள் நடத்தப்படுவதில்லை. இதன் காரணமாக டிஜிட்டல் வகுப்புகள் மூலம் பயன்பெற முடியாத சூழல் நிலவுகிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் தரப்பில், இன்னும் சில வாரங்களுக்கு டிஜிட்டல் வகுப்புகளை நடத்தினால் நல்லது. இது அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க உதவியாக இருக்கும். தேர்வுகள் நடத்தும் போது நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்களையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad