தங்கத்துக்கு இடமில்லையா? வேட்பாளர்களை அறிவித்த ஸ்டாலின் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

தங்கத்துக்கு இடமில்லையா? வேட்பாளர்களை அறிவித்த ஸ்டாலின்

தங்கத்துக்கு இடமில்லையா? வேட்பாளர்களை அறிவித்த ஸ்டாலின்

மாநிலங்களவைக்கு சமீபத்தில் திமுக உறுப்பினர் அப்துல்லா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் காலியாக உள்ள இரு இடங்களுக்கு திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர்
மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகித்தனர். இருவரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த இரு இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு திமுக வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, திமுக மருத்துவர் அணி மாநில செயலாளர் மருத்துவர் கனிமொழி, நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ் இருவரும் போட்டியிடுவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மூத்த தலைவர் என்.வி.என் சோமு மகள் மருத்துவர் கனிமொழி ஆவார். இவர் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் மாதவரம் தொகுதியிலும், 2016 தேர்தலில் தி.நகர் தொகுதியிலும் போட்டியிட்டார். இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள் என்பதால், மாநிலங்களவையில் தி.மு.க. பலம் 10 ஆக அதிகரிக்கிறது.முன்னதாக இந்த இடங்களுக்கு தங்க தமிழ்ச் செல்வன், கார்த்திகேய சிவசேனாபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் பெயர்கள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad