இவ்வளவு சம்பளம் வாங்குறீங்க: ஆசிரியர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

இவ்வளவு சம்பளம் வாங்குறீங்க: ஆசிரியர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்!

இவ்வளவு சம்பளம் வாங்குறீங்க: ஆசிரியர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்,
ஆசிரியர்கள் அவர்களது ஊதியத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ரூ.1.25 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள். இதுவே, ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஏழாயிரம் ரூபாய், எட்டாயிரம் ரூபாய் என்று சம்பளம் பெறுகிறார் என்று சுட்டிக்காட்டினார்.

தனியார் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். மருத்துவ இடங்கள், பொறியியல் துறை, பல் மருத்துவம் ஆகியவற்றைப் படிக்கக் கல்லூரிகளில் இடம்பிடிக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர் கணேசன், “தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் போட்டி போட வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் குறிப்பிடவில்லை. சில அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களைத் திறம்பட வளர்த்திருக்கிறார்கள். கடின உழைப்பைக் கொடுக்கிறார்கள். சிலர் இரவில் அமர்ந்தும் பணியாற்றுகிறார்கள். அதைப்போல ஒவ்வொரு ஆசிரியரும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்” அறிவுறுத்தினார்.

தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அப்போது கேட்டுக் கொண்டார்.

மேலும், முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நாட்டின் முன்னேற்றம் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. மாணவர்களை நல்லொழுக்கப்படுத்துவது ஆசிரியரின் கையில்தான் உள்ளது. அரசுப் பள்ளிகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது அனைத்து ஆசிரியர்களின் கடமை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad