திமுக அரசு செய்த அசத்தலான காரியம்; இப்படியொரு வரவேற்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

திமுக அரசு செய்த அசத்தலான காரியம்; இப்படியொரு வரவேற்பு!

திமுக அரசு செய்த அசத்தலான காரியம்; இப்படியொரு வரவேற்பு!

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாணவி
அனிதா தொடங்கி, சேலம் மாணவன் தனுஷ் வரை கடந்த 4 ஆண்டுகளில் 14 மாணவர்களின் மரணத்திற்கு காரணமான, ஏழை எளிய கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை தகர்க்கும், நீட் எனும் நுழைவுத் தேர்வுக்கு எதிராக, தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை கொண்டுவந்து அதனை நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு எனும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தமிழகத்தில் ஏழை எளிய கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனியாக மாறிப்போனது. அதேபோல் மாநில பாடத்திட்டத்தில் பள்ளிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெற்ற நிலையில், மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வு நடத்தப்படுவதாலும் தமிழக மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்வியை வசதிபடைத்த மேல்தட்டு வர்க்கம் மட்டுமே கற்றுக்கொள்ளவும், அதனை கார்ப்பரேட் மயமாக்கும் யுக்தியாகவே நீட் கொண்டுவரப்பட்டுள்ளது.

நீட்டின் மூலம் தரம் என்ற பெயரில், உயர் கட்டணங்கள் வழியாக தனிப் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி, வசதிபடைத்த ஒரு சாரார் மருத்துவ கல்லூரிகளில் நுழைகின்றனர். அதேவேளையில் வசதியற்ற ஏழை மாணவர்கள்
மருத்துவம் பயில தகுதி அற்றவர்கள் என துரத்தியடிக்கப்படுகின்றனர். இதிலும் மத்திய அரசின் கார்ப்பரேட் நலனே உள்ளதே தவிர, சிறிதும் ஏழை-எளிய மாணவர்களின் நலன் என்பது அறவே இல்லை. நாட்டின் கல்வியை மேம்படுத்துவது என்பது கல்விக் கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமே சாத்தியமாகுமே தவிர, நுழைவுத் தேர்வு என்ற தகுதியை திணிப்பதன் மூலம் சாத்தியமாகாது.

பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வால் ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நசுங்கி போயுள்ளன. பல லட்சங்கள் தொகைகளை செலவு செய்து தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு வாய்ப்புள்ள வசதியான மேல்தட்டு மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியை பெற முடியும் என்ற நிலையை நீட் தகுதி தேர்வு ஏற்படுத்தியுள்ளதை களநிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனை, நீட் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டறிவதற்காக தமிழக அரசு சார்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை அல்ல என்பது நீதிபதி ஏகே. ராஜன் குழு அறிக்கை மூலம் தெளிவாகிறது. நீட் விலக்கு சட்ட மசோதாவுடன், நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் விரைந்து நடத்தி நீட் தேர்வுக்கு எதிரான தீர்ப்பைப் பெற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற்றிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad