இறைச்சி கடைகளை மூட உத்தரவு; மாநில அரசு அதிரடி நடவடிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

இறைச்சி கடைகளை மூட உத்தரவு; மாநில அரசு அதிரடி நடவடிக்கை!

இறைச்சி கடைகளை மூட உத்தரவு; மாநில அரசு அதிரடி நடவடிக்கை!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் நாளை (செப்டம்பர் 10) கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது, விநாயகர் பிறந்த தினத்தையே விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும்.

பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக வெகு விமர்சையான கொண்டாட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. எளிமையான முறையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கொரோனா இரண்டாவது அலை

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை பெரிதும் தணிந்திருக்கிறது. தினசரி தொற்று 1,200க்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்றைய தினம் புதிதாக 1,102 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 1,458 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 17 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 17,058 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொண்டாட்டங்களுக்கு தடை

மூன்றாவது அலை எச்சரிக்கையை ஒட்டி உரிய முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது. இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாட

கர்நாடக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் பிரம்மாண்டமான முறையில் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. 20 பேருக்கு மேல் விநாயகர் சிலை வழிபாடு, கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.

கறிக்கடைகளை மூட உத்தரவு

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் உணவு, பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாசிடிவ் விகிதம் 2 சதவீதத்திற்கு அதிகமுள்ள மாவட்டங்களில் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை. இரவு 9 மணிக்கு மேல் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.

No comments:

Post a Comment

Post Top Ad