தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிய நிம்மதி; உத்தரவை திரும்பப் பெற்ற அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிய நிம்மதி; உத்தரவை திரும்பப் பெற்ற அரசு!

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிய நிம்மதி; உத்தரவை திரும்பப் பெற்ற அரசு!

குஜராத் மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8 மணி நேரமும், சனிக்கிழமை அன்று மட்டும் 5 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தற்போது தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றி வருவதை விட கூடுதலாக 2 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு உத்தரவிற்கு பல்வேறு ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு ஆசிரியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஆசிரியர்கள் சங்கத்தினர், RTE சட்டத்தின் படி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமெனில், அவர்களுக்கு பாடம் கற்பித்தலை தவிர்த்து வேறு வேலைகள் வழங்கக் கூடாது. மேலும் மற்ற அரசு ஊழியர்களைப் போன்று சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

கூடுதலாக 2 மணி நேரம் வேலை

தற்போது மாணவர்கள் வருவதற்கு ஒருமணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வருகை தந்து, மாணவர்கள் சென்ற பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாகத் தான் புறப்பட்டுச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி 8 மணி நேர வேலையில் இடைவேளை நேரம் சேர்க்கப்படவில்லை. அந்த நேரத்திலும் மாணவர்களை ஆசிரியர்கள் பாதுகாப்பான முறையில் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இத்தகைய சூழலில் வேலை நேரத்தை நீட்டிப்பது சரியானது அல்ல என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

அமைச்சரவையில் முக்கிய முடிவு

தொடக்கக் கல்வி என்பது மிகவும் சிறிய வயதினருக்கு கற்பிக்கப்படுவதாகும். அதற்கு பொறுமையும், நிதானமும் தேவை. எனவே அதிக நேரம் பணியாற்றினால் அதிக பயன் கிடைக்கும் என்று தொடக்கக் கல்வியில் கடைபிடிக்க முடியாது. ஒரே நாளில் அதிக நேரம் பணியாற்றினால் அதிகம் கற்றுத் தர முடியும் என்று நினைப்பது தவறு என ஆசிரியர்கள் சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. இதையடுத்து நேற்றைய தினம் குஜராத் மாநில அமைச்சரவைக் கூட்டம் கூடியது.

அதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற அறிவிப்பு திரும்பப் பெறுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் ஆசிரியர்கள் தங்கள் பணியை திருப்தியாக செய்து முடித்துவிட்டோம் என்று கருதும் வரை பணியாற்றலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad