திருப்பதியில் எதிர்பார்க்காத ஏழு ஆச்சரியங்கள்; இன்னும் நான்கு நாட்களில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

திருப்பதியில் எதிர்பார்க்காத ஏழு ஆச்சரியங்கள்; இன்னும் நான்கு நாட்களில்!

திருப்பதியில் எதிர்பார்க்காத ஏழு ஆச்சரியங்கள்; இன்னும் நான்கு நாட்களில்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்களின் வருகை படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் சரிவை சந்தித்திருந்த திருமலையின் பொருளாதாரம் ஏற்றம் பெறத் தொடங்கியுள்ளது. இதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு பயன் தரும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் நவநீத சேவை என்ற பெயரில் நாட்டு மாடுகளில் இருந்து பெறப்பட்ட சுத்தமான நெய் மற்றும் இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் உள்ளிட்டவற்றை கொண்டு பிரசாதமும், அன்னதானமும் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் சுவையும், ஆரோக்கியமும் மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கிறது என்று பக்தர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதன் வரிசையில் நறுமணம் வீசும் அகர்பத்திகள் தயாரிப்பில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஸ்ரீவெங்கடாஜலபதி ஏழு மலைகளின் மீது அமர்ந்திருப்பதை உணர்த்தும் வகையில் ஏழு விதமான சிறப்பு வாய்ந்த அகர்பத்திகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அபயஹஸ்தா, தந்தனானா, திவ்ய பாடா, அக்ருஸ்தி, ஸ்ருஸ்தி, துஸ்தி, த்ருஸ்தி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அகர்பத்திகள் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் மாலைகளில் இருந்து பெறப்படும் மலர்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. வழக்கமாக வெங்கடாஜலபதி உள்ளிட்ட பல்வேறு சாமிகளுக்கு அணிவிக்கப்படும் மாலைகள் ஒவ்வொரு நாள் மாலையும் அப்புறப்படுத்தப்படும். இதனால் வீணாகும் டன் கணக்கான மலர்களை மறுசுழற்சி முறையில் அகர்பத்திகளாக மாற்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
திருமலை மட்டுமின்றி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்து கோயில்களில் பயன்படுத்தப்படும் மாலைகளும் இந்த திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளப்படும். குறிப்பாக பண்டிகைகள், சிறப்பு திருவிழாக்களின் போது பெரிய அளவில் மலர் மாலைகள் வீணாகும் சூழல் ஏற்படும். இவை குப்பைகளாக அகற்றப்படாமல் பயனுள்ள வகையில் மாற்ற தேவஸ்தானம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக பெங்களூருவை சேர்ந்த தர்ஷன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் திருப்பதி தேவஸ்தானம் கைகோர்த்துள்ளது. அதாவது மலிவான விலையில் லாபத்தை எதிர்பார்க்காமல் மிகவும் தரமான அகர்பத்திகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிலம், கட்டுப்பானப் பணிகள் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் அளிக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad