உலகளவில் பிரதமர் நரேந்திர மோடி தான் "டாப்" - ஆய்வில் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

உலகளவில் பிரதமர் நரேந்திர மோடி தான் "டாப்" - ஆய்வில் தகவல்!

உலகளவில் பிரதமர் நரேந்திர மோடி தான் "டாப்" - ஆய்வில் தகவல்!

உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் புகழ் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவராக தேர்வாகி உள்ளார். அவருக்கு 70 சதவீதம் பேர் தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர்.


உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் புகழ் தொடர்பாக 'தி மார்னிங் கன்சல்ட்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானவேல் லோபஸ், இத்தாலி பிரதமர் மாரியோ டிரகி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், கனடா பிரதமர் ட்ருடோ ஆகியோர் அடங்குவர்.

கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி, பிரதமர் நரேந்திர மோடி பிரபலமான தலைவராக தேர்வாகி உள்ளார். அவரை, 70 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர். பிரதமர் மோடியைத் தொடர்ந்து, மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் - 64 %; இத்தாலி பிரதமர் மரியோ டிராகி - 63 %; ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் 52 %;
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - 48 %; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் - 48 %; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ- 45 %; பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ - 39 %; தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் - 38 %; ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் - 35 %; பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் - 34 %; ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா - 25 %.

No comments:

Post a Comment

Post Top Ad