10ம் வகுப்பு தேர்வு: 86 வயதில் தேர்ச்சி பெற்ற முன்னாள் முதலமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

10ம் வகுப்பு தேர்வு: 86 வயதில் தேர்ச்சி பெற்ற முன்னாள் முதலமைச்சர்!

10ம் வகுப்பு தேர்வு: 86 வயதில் தேர்ச்சி பெற்ற முன்னாள் முதலமைச்சர்!

முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 86வது வயதில், 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 88 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வயது 86. இவர் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இப்போது வீட்டில் இருக்கிறார்.

இவர், சிறையில் இருந்த போது, தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனம் மூலம் 10ம் வகுப்பு படித்தார். இதில் அவர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற வில்லை. இதை அடுத்து 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை கடந்த மாதம் அவர் எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் அவர் 88 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.


இது குறித்து மாநில கல்வி வாரிய தலைவர் டாக்டர் ஜக்பீர் சிங் கூறியதாவது:
10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை முடிக்காமல் அவர் 12ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்திருந்தார். 10ம் வகுப்பு முடித்த பின்பே 12ம் வகுப்பு தேர்வ ு எழுத முடியும் என்று கூறியதை அடுத்து அவர் விடுபட்ட ஆங்கில தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று உள்ளார். இனி, அவர் 12ம் வகுப்பு தேர்வை எழுதலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

86 வயதான ஓம் பிரகாஷ் சவுதாலா, சிர்சா நகரில் உள்ள ஆர்ய கன்யா சீனியர் செகன்டரி பள்ளியில் இத்தேர்வை எழுதினார். கையில் எலும்பு முறிவு இருப்பதால், தேர்வு எழுத உதவியாளர் ஒருவர் வேண்டும் என கோரினார். அதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் 2 மணி நேரத்தில் அவர் தேர்வு எழுதி விட்டு அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad