மூடப்படும் ஃபோர்டு நிறுவனத்தை வாங்குகிறதா டாடா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

மூடப்படும் ஃபோர்டு நிறுவனத்தை வாங்குகிறதா டாடா?

மூடப்படும் ஃபோர்டு நிறுவனத்தை வாங்குகிறதா டாடா?

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு. சென்னை அருகே மறைமலை நகரில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. அதேபோல், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியிலும் பல ஆண்டுகளாக
ஃபோர்டு நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது.

இந்த நிலையில் சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரண்டு இடங்களிலும் உள்ள நிறுவனத்தை மூடுவதற்கு ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது மிக குறைந்த அளவே கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் அந்நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தியாவில் இறக்குமதி மூலம் கார்களை ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்யும் எனவும், காரை ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆலைகள் மூடப்பட்டால் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். அதுமட்டுமின்றி அந்த நிறுவனத்தால் மறைமுகமாக வேலைவாய்ப்பை பெற்றிருப்போரும் பாதிப்புக்கு உள்ளாவர்.இந்த நிலையில், இந்தியாவில் மூடப்படவுள்ள ஃபோர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு தமிழக அரசும் போதிய ஒத்துழைப்ப ு வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் கூறுகையில், “ஃபோர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கினால் தமிழக அரசு தேவையான ஒத்துழைப்பை அளிக்கும். அதே நேரத்தில் ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படாது” என்றார்.

இதுபற்றி டாடா நிறுவனம் விரைவில் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டாடா நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad