மின் கட்டண கோரிக்கை: இயக்குநர் தங்கர் பச்சான் மீண்டும் விளக்கம்!
முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும்
மின் கட்டணம் கணக்கிட்டால் தமிழக மக்கள் பல மடங்கு தொகையை மின் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்காது என்ற கோரிக்கையை இயக்குநர் தங்கர் பச்சான் சில நாட்களுக்கு முன்னர் விடுத்திருந்தார். அதன்பின்னர், மின் கணக்க
ை சரிபார்த்து, விளக்கம் அளிக்க அவரது வீட்டுக்கு இரண்டு முறை சென்ற அதிகாரிகள், கட்டணம் குறித்த விவரங்கள் அடங்கிய தாள் ஒன்றைக்கொடுத்து, அதைப் படமெடுத்துச் சென்றதாக தங்கர் பச்சான் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது ட்விட்டர் பக்கத்தில், தங்கர் பச்சானின் மின் கணக்கு குறித்து விளக்கம் அளித்து விட்டதாக பதிவிட்டார். இதனிடையே, சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக சமூக வலைதளங்களில் தங்கர்
பச்சான் புகார் தெரிவித்ததாகவும், அதற்கு உடனே அதிகாரிகள் விளக்கம் அளித்து விட்டதாகவும், அதன் பின் அவர் `சாரி' என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தனக்கு விளக்கம் தேவையில்லை, கட்டணமுறை மாற்றம் தான் தேவை என்ற கோரிக்கையை மீண்டும் தெளிவு படுத்தியிருந்தார் தங்கர் பச்சான். இந்த நிலையில், மின் கட்டண கோரிக்கை தொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment