பள்ளி மாணவர்களுக்கு புதிய சிக்கல்; தலைமை செயலாளர் முக்கிய ஏற்பாடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

பள்ளி மாணவர்களுக்கு புதிய சிக்கல்; தலைமை செயலாளர் முக்கிய ஏற்பாடு!

பள்ளி மாணவர்களுக்கு புதிய சிக்கல்; தலைமை செயலாளர் முக்கிய ஏற்பாடு!

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதல்கட்டமாக 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டனர். இதையொட்டி உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி இன்று (செப்டம்பர் 8) முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு

9-12ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருவாரமான நிலையில், பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ஒருவாரம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

மா.சுப்பிரமணியன்,

மெகா தடுப்பூசி முகாம்

பள்ளிகள் திறந்ததால் தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. முன்னதாகவே வைரஸ் பாதிப்பு உண்டாகி, தற்போது வெளிப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் வரும் 12ஆம் தேதி ஒரேநாளில் 10 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகளில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கொரோனா தொற்று கண்டறியப்படும் பள்ளிகள் சீல் வைக்கப்படும். தற்போதைய சூழலில் குறைவான மாணவர்களுக்கே நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad