சபரிமலை பக்தர்களுக்கு ஷாக்; தேவசம் போர்டு புதிய திட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

சபரிமலை பக்தர்களுக்கு ஷாக்; தேவசம் போர்டு புதிய திட்டம்!

சபரிமலை பக்தர்களுக்கு ஷாக்; தேவசம் போர்டு புதிய திட்டம்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆன்மீகத் தலம் சபரிமலை. மஹிஷி என்ற அரக்கியை கொன்று விட்டு சுவாமி அய்யப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என்று சொல்லப்படுகிறது. இதையொட்டி 18 மலைகளுக்கு இடையே அய்யப்பன் கோயில் எழுப்பப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட ு வருகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
மேலும் காடு, மலைகளால் சூழப்பட்டிருக்கிறது. சபரிமலையை சுற்றியுள்ள ஒவ்வொரு மலையிலும் கோயில்கள் இருக்கின்றன. அய்யப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இதற்காக ருத்திராட்சை அல்லது துளசி மணிகளால் செய்யப்பட்ட சிறப்பு மாலையை அணிந்து கொள்வர். விரத காலத்தில் அசைவ உணவுகள், மது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
விரதம் முடிந்த பின்னர் இருமுடி கட்டி அய்யப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை புரிவர். சபரிமலை அய்யப்பன் கோயிலை திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் நிர்வகித்து வருகிறது. சபரிமலைக்கு பக்தர்களின் வருகையால் கேரள அரசுக்கு ஆண்டுதோறும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. இந்த சூழலில் அய்யப்பன் கோயிலில் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியானது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதனை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் தான் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மாத பூஜை, ஓணம் பண்டிகை உள்ளிட்டவற்றிற்கு அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad