ரூ.20,000 அபராதம், அதிரடி சஸ்பெண்ட்; அரசு ஊழியர்கள் செம ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

ரூ.20,000 அபராதம், அதிரடி சஸ்பெண்ட்; அரசு ஊழியர்கள் செம ஷாக்!

ரூ.20,000 அபராதம், அதிரடி சஸ்பெண்ட்; அரசு ஊழியர்கள் செம ஷாக்!

பொதுவாக அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஒரு வேலைக்காக சென்றால் நீண்ட நாட்கள் இழுத்தடிக்கும் போக்கு இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி அரசும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிறது. இந்த நடைமுறையை மாற்றி எழுதும் வகையில்


ஹரியானா அரசு முன்வந்துள்ளது. அதாவது, ஹரியானா மாநிலத்தின் சேவை உரிமை ஆணையத்தின் (RTSC) தலைமை ஆணையர் டி.சி.குப்தா அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளார். உரிய நேரத்தில் தங்களது வேலையை செய்து முடிக்காத 250 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய RTSC துறையின் தலைமை ஆணையர் டி.சி.குப்தா, அரசின் 31 துறைகளின் 546 சேவைகள் இந்த ஆணையத்தின் கீழ் வருகின்றன.

அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்யப்படும். அதற்குள் அந்த விஷயங்களை செய்து முடிக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு காரணம் கொண்டும் அரசின் சேவைகளில் தாமதம் செய்யக் கூடாது. பொதுமக்கள் நலனில் மிகவும் அக்கறையுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு உரிய சேவைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். பல்வேறு கூட்டங்களை நடத்துவதன் மூலம் Right-to-Service எனப்படும் அரசின் சேவைகளை பெறும் உரிமை குறித்து மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தப் படும்.

No comments:

Post a Comment

Post Top Ad