ஊரடங்கை மீறி அதிர்ச்சியூட்டும் கடைகள்; எச்சரிக்கும் மாநில அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

ஊரடங்கை மீறி அதிர்ச்சியூட்டும் கடைகள்; எச்சரிக்கும் மாநில அரசு!

ஊரடங்கை மீறி அதிர்ச்சியூட்டும் கடைகள்; எச்சரிக்கும் மாநில அரசு!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. தினசரி தொற்று 1,300க்கும் கீழ் சரிந்துள்ளது. நேற்றைய தினம் புதிதாக 1,220 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 1,175 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 18,404 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளை முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு அறிவித்தது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று கர்நாடக அரசை கவலைக்கு ஆளாக்கி இருக்கிறது.

இதையொட்டி எல்லையோர மாவட்டமான தக்‌ஷின கன்னடாவில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் வரும் 13ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவொரு தடையும் இல்லை. ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து தக்‌ஷின கன்னடா மாவட்டத்திற்கு படிப்பதற்காக வந்து நர்சிங், பாராமெடிக்கல் உள்ளிட்ட கல்லூரிகளின் விடுதிகளில் தங்கும் மாணவர்கள் அனைவரும் கோவிட்-19 RT-PCR பரிசோதனை செய்து நெகடிவ் சான்று கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 பேர் வரை பங்கேற்கலாம். இந்நிலையில் வார இறுதி கட்டுப்பாடுகளால் தங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பை சந்திப்பதாக எல்லையோர மாவட்ட கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அரசின் உத்தரவை மீறி வார இறுதி நாட்களில் தங்களின் கடைகளை திறந்து வைக்கப் போவதாக பல்வேறு கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியூட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad