"தலிபான்கள் தான் காரணம்!" - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க. - எம்.எல்.ஏ., விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

"தலிபான்கள் தான் காரணம்!" - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க. - எம்.எல்.ஏ., விளக்கம்!

"தலிபான்கள் தான் காரணம்!" - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க. - எம்.எல்.ஏ., விளக்கம்!

இந்தியாவில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு, தலிபான்கள் தான் காரணம் என, கர்நாடக மாநில பா.ஜ.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லட் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த அதிகாரத்தை மத்திய பா.ஜ.க. அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது.

நாட்டில் தற்போது, வரலாறு காணாத வகையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. தமிழகம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போல், ஒரு லிட்டர் டீசலும் சுமார் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கொரோனா ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்பகிறது.

இதற்கிடையே பொது மக்கள் பயன்படுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad