வெற்றி வாகை சூடுவாரா முதல்வர் மம்தா? - இடைத்தேர்தலில் மம்தாவை வீழ்த்த பக்கா ப்ளான் போடும் பா.ஜ.க.! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

வெற்றி வாகை சூடுவாரா முதல்வர் மம்தா? - இடைத்தேர்தலில் மம்தாவை வீழ்த்த பக்கா ப்ளான் போடும் பா.ஜ.க.!

வெற்றி வாகை சூடுவாரா முதல்வர் மம்தா? - இடைத்தேர்தலில் மம்தாவை வீழ்த்த பக்கா ப்ளான் போடும் பா.ஜ.க.!

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பபானிபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 210-க்கும் அதிகமான தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிக் கொடியை நாட்டியது. எதிர்க்கட்சியான பா.ஜ.க., வெறும் 77 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.க.,வை எதிர்த்து தனி ஒரு பெண்மணியாக மம்தா பானர்ஜி துணிந்து போராடியதே தேர்தல் வெற்றிக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.சட்டப்பேரவைத் தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சுமார் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இதை அடுத்து சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெறாவிட்டாலும், தனது கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதால், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்றாவது முறையாக, மம்தா பானர்ஜி பதவி ஏற்றார். எம்.எல்.ஏ.,வாக இல்லாத ஒருவர், ஆறு மாதங்களுக்குள் ஏதாவது சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது சட்டம்.

No comments:

Post a Comment

Post Top Ad