சென்னையில் "பனம் பழச்சாறு"..!
தமிழகத்தில் மண் மற்றும் நீரின் வளத்தை பாதுகாக்க பனை மரத்தின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று. ஆனால், தொழில்நுப்ட வளர்ச்சி மற்றும் கிராம புறங்களிலும் ஊடுருவியுள்ள கார்ப்பரேட் கட்டுமானங்கள் காரணமாக பனை மரங்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துவிட்டது.
இதில் தமிழக அரசு தனி அக்கறை செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக நாம் தமிழர் கட்சி, சுற்று சூழல் அமைப்புகள் வைத்து வருகின்றன.
இதற்கு மத்தியில் தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையின்போது
பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், பனை மரத்தின் தேவையை மக்களிடையே புரிய வைப்பதும் பனை மரங்களின் பாதுகாப்புக்கு ஒரு தீர்வாக உள்ளது. இந்நிலையில் கிராம புறங்களில் பனை மரம், பனம்பழம், நுங்கு மற்றும் கிழங்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் இருப்பது போல நகர் புறங்களிலும் சமீப நாட்களில் அதிகரித்து வருகிறது. சென்னையில் "பனம் பழச்சாறு" விற்பனை செய்வது மட்டுமல்லாமல் பனம்பழத்தில் இருந்து எப்படி சாறு எடுப்பது என்பதை பற்றியும் செய்முறை பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்கும் பனம்பழம் சூட்டையும் தணிக்க வல்லது. நகர் புறங்களில் பனம்பழம்
கிடைக்குமா என்று கேள்வி எழுப்புவர்களுக்கு இதுபோன்ற செய்திகள் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment