அக்டோபர் மாதமே நேரடி வகுப்புகள் ஆரம்பம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 30, 2021

அக்டோபர் மாதமே நேரடி வகுப்புகள் ஆரம்பம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி!

 அக்டோபர் மாதமே நேரடி வகுப்புகள் ஆரம்பம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி!


கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் இவ்வளவு நாள்கள் திறக்கப்படாத நிலையில் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதை போக்க எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி, ஒவ்வொர ு ஆசிரியரும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களின் பகுதிக்கு சென்று, அங்குள்ள மாணாக்கர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்தவும், கற்றல் குறைபாட்டை போக்க பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad