கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல்துறையினர் மறுவிசாரணைக்கு தடை விதிக்க கோரி வழக்கின் காவல்துறை சாட்சியான கோவையை சேர்ந்த அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.

அந்த மனுவில், ஏற்கனவே இந்த வழக்கில் 41 காவல்துறை சாட்சிகள் விசாரித்து முடிக்கப்பட்டு, குற்றவாளியிடம் குறுக்கு விசாரணையும் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், மீண்டும் தன்னிடம் காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தி வருகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது, காவல்துறையினரின் மறுவிசாரணையில் உள்நோக்கம் உள்ளது. எனவே இந்த வழக்கை விரைந்து முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், தற்போது நடைபெறும் காவல்துறை மறுவிசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரு வழக்கில் மறுவிசாரணை என்பது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இவ்வழக்கில் அவ்வாறு விதிமுறை ஏதும் பிப்பற்றப்படவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் அரசியல் காரணங்களுக்காக இவ்விவகரம் முக்கியத்துவம் பெற்று உள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து மிரட்டல்கள் வருகிறது” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் மறுவிசாரனைக்கு எந்த தடையும் விதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad