'மதத்தை வைத்து பிழைப்பு நடத்தாதே, மீதி 14 வீடியோ எப்போ வரும்? அண்ணாமலைக்கு வைரல் தபால் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

'மதத்தை வைத்து பிழைப்பு நடத்தாதே, மீதி 14 வீடியோ எப்போ வரும்? அண்ணாமலைக்கு வைரல் தபால்

'மதத்தை வைத்து பிழைப்பு நடத்தாதே, மீதி 14 வீடியோ எப்போ வரும்? அண்ணாமலைக்கு வைரல் தபால்

தமிழகத்தில் வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொது இடங்களில் சிலைகளை அமைக்கவும், சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், வீடுகளில் வைத்து கொண்டாடப்படும் சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்தில ோ வைத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக், திரையரங்குகள், பள்ளிகளை திறக்கும் அரசு இந்து விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் தடை விதிப்பது நியாயமா? என்று பாஜகவினரும், இந்து அமைப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில த்தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கூடி கொண்டாட வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலையை எங்களது வீட்டு வாசலிலே மூன்று நாட்களுக்கு வைத்து வழிபட போகிறோம் என்றும் அது எங்களது தனிப்பட்ட உரிமை என்பதால் அரசு அதில் தலையிட முடியாது என்றும் கூறினார்.

மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு லட்சம் கார்டுகளை தபால் மூலம் அனுப்புங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இதனிடையே, ட்விட்டரில் இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக போஸ்ட் கார்டு மாதிரி ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த போஸ்டில் கூறப்பட்டுள்ளதாவது;

''மதத்தை வைத்து பிழைப்பு நடத்தாதே.

மக்கள் பிரச்சினையை பேசு.

கேஸ் விலை என்னன்னு தெரியுமா?


கே.டி. ராகவன் சௌக்கியமா?

மதனை எங்க ஆளே காணோம்?

ஆட்டுகுட்டிகளுக்கு நேரத்துக்கு இரை போடு...

மிச்சம் 14 வீடியோ எப்ப வரும்?''

என எழுதி, அண்ணாமலைக்கு பாஜக அலுவலகம் கமலாய முகவரிக்கு எழுதியுள்ளதான அந்த போஸ்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad