இவர்களுக்கு மட்டுமே சரக்கு: டாஸ்மாக் கடைகளில் புது ரூல்ஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

இவர்களுக்கு மட்டுமே சரக்கு: டாஸ்மாக் கடைகளில் புது ரூல்ஸ்!

இவர்களுக்கு மட்டுமே சரக்கு: டாஸ்மாக் கடைகளில் புது ரூல்ஸ்!

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசியை அனைவருக்கும் விரைந்து போட்டு முடிக்கும் பொருட்டு, அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதேசமயம், பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றைக் காண்பித்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு மது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா பிறப்பித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்யப்படும். தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படாது என்றும் கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றுகளை மதுக்கடை ஊழியர்களிடம் காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் தடுப்பூசி செலுத்துவத ை ஊக்குவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு வரும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி செலுத்துவார்கள் என்றும் அம்மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 76 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் நாள்தோறும் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான மது விற்பனையாகிறது. குளிர் பிரதேசம், சுற்றுலாத் தலம் என்பதால் நீலகிரியில் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad