கோவையில் கலக்கும் ஸ்டார்ட் அப்; பெட்ரோல் ஸ்கூட்டருக்கு தீர்வு காணும் கிட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

கோவையில் கலக்கும் ஸ்டார்ட் அப்; பெட்ரோல் ஸ்கூட்டருக்கு தீர்வு காணும் கிட்!

கோவையில் கலக்கும் ஸ்டார்ட் அப்; பெட்ரோல் ஸ்கூட்டருக்கு தீர்வு காணும் கிட்!

இயந்திரமயமான உலகில் நாளுக்கு நாள் புவி வெப்பமடைந்து வருகிறது. இவ்வாறு வெப்பமடைவதால் உலகின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. இந்த பருவநிலை மாற்றம் வளரும் நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மரபுசாரா எரிசக்தி திறன்கள் ஊக்குவிக்கபப்டுகிறது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாம் அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு வழிகளில் உதவ முயற்சித்து வருவம் நிலையில், மின்சார வாகனங்களே எதிர்காலத்தின் வழியாக இருக்கிறது. ஏனெனில் அவை மாசுபாட்டைக் குறைக்க உதவுகின்றன. ஆனால், இது பல இந்திய நகரங்களில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. காரணம் அதிலிருக்கும் ஐசி என்ஜின் வாகனங்கள் நாட்டின் வாகன உமிழ்வை அதிகரிப்பதாகவும், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகளை அகற்ற அல்லது குறைந்தபட்சம் குறைக்க மின்மயமாக்கப்பட்டால் என்ன ஆகும்? கோவையை சேர்ந்த ஒரு

ஸ்டார்ட் அப் நிறுவனம் அதற்கு பதில் அளிப்பதாகத் தெரிகிறது. மெக்கட்ரான் மோட்டார்ஸ் எனும் அந்த நிறுவனம் கடந்த மே மாதம் வீரகுமார் மற்றும் அவரது குழுவினரால் நிறுவப்பட்டது. இக்குழுவினர், பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான கலப்பின மின் மாற்ற கருவியை தாயாரித்துள்ளனர்.

ஹைப்ரிட் கன்வெர்ஷன் எனப்படும் அந்த கிட், எந்தவொரு வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டரையும் எலக்ட்ரிக்-ஹைபிரிட் ஸ்கூட்டராக மாற்றும். இதன்மூலம், அபாயகரமான உமிழ்வை குறைப்பதுடன், முற்றிலும் மின்சார மூலத்துடன் பயணத்தை மேற்கொள்ளவும் முடியும் என்கின்றனர் அந்த நிறுவனத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad