இன்று முதல் ஆரம்பம்; வெற்றி வாகை சூடுவாரா கமல் ஹாசன்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

இன்று முதல் ஆரம்பம்; வெற்றி வாகை சூடுவாரா கமல் ஹாசன்?

இன்று முதல் ஆரம்பம்; வெற்றி வாகை சூடுவாரா கமல் ஹாசன்?

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 23,998 பதவிகளுக்கு 79,433 பேர் போட்டியிடுகின்றனர்.

அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பு

அதில், 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று முதல் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க உள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர். மறுபுறம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மக்கள் நீதி மய்யம் அறிக்கை

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வலுவான உள்ளாட்சிகளே முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. அந்த அடிப்படையில் உள்ளாட்சிகளின் மேம்பாட்டிற்காக கருத்தியல் ரீதியிலும்,

முதல்கட்ட பிரச்சாரப் பயணம்

களத்திலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. இதில் எங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகின்றனர். உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் முதல்கட்ட பிரச்சாரம் பயணம் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் இருந்து தொடங்குகிறது.

வரும் 30ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நகர்ப்புற பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி கிடைத்தது. கிராமப்புறங்களில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. எனவே வரும் உள்ளாட்சி தேர்தலை பயன்படுத்தி கிராமப்புறங்களில் தங்களது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள மக்கள் நீதி மய்யம் தீவிர களப்பணியாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கப் போகிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டிவிடும்.

No comments:

Post a Comment

Post Top Ad