பூட்டிய வீட்டில் கொள்ளையை தடுக்க பொது மக்கள் இதை செய்தால் போதும்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

பூட்டிய வீட்டில் கொள்ளையை தடுக்க பொது மக்கள் இதை செய்தால் போதும்!

பூட்டிய வீட்டில் கொள்ளையை தடுக்க பொது மக்கள் இதை செய்தால் போதும்!

வேலுார் மாவட்டம், வேலுார், காட்பாடி, சத்துவாச்சாரி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் பூட்டிய வீடுகளில் மர்ம நபர்கள் கதவை உடைத்து பணம், நகை திருடி வருவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது, அது தொடர்பான தகவலை அருகில் உள்ள காவல்நிலையங்களில் தெரிவிக்குமாற ு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனாலும், இது போன்ற தகவலை தெரிவிக்க பொது மக்கள் முன்வராமல் தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில், ஆன்லைன் மூலம் தகவல் அளிக்கும் புதிய நடைமுறையை வேலுார் ஏ.எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “வேலுார் வடக்கு, தெற்கு, தாலுகா, சத்துவாச்சாரி, பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், அணைக்கட்டு, விரிஞ்சிபுரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் வசிப்பவர்கள், தங்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு வெளியூர் செல்லும் போது, https://forms.gle/pbFqgFBe54aPKp1s6 என்ற முகவரிக்கு ஆன்லைனில் மொபைல் போனிலே தகவல் தெரிவிக்கலாம்.

அதில், பெயர், வீட்டு முகவரி, மொபைல் எண், அடையாள சான்று, வீட்டை பூட்டிக் கொண்டு புறப்படம் தேதி, நாள், திரும்பும் நாள், அருகில் உள்ள காவல் நிலைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்கள் ஏ.எஸ்.பி., அலுவலக கணினியில் சேகரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்த வீடுகள் போலீசாரால் அடிக்கடி கண்காணிக்கப்படும். இதனால் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad