'பைத்தியகாரங்க'... அண்ணாமலையின் பேச்சுக்கு சீமான் பதிலடி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

'பைத்தியகாரங்க'... அண்ணாமலையின் பேச்சுக்கு சீமான் பதிலடி..!

'பைத்தியகாரங்க'... அண்ணாமலையின் பேச்சுக்கு சீமான் பதிலடி..!

கே.டி. ராகவனின் ஆபாச வீடியோ லீக் ஆனதை குறித்து அண்மையில் சீமான் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது, உலகத்தில் எங்குமே நடக்காததையா அவர் செய்துவிட்டார்? ஒருத்தருடைய அனுமதி இல்லமால், படுக்கையறை, கழிவறையில் இருந்து வீடியோ எடுத்து வெளியிடுவதுதான் சமூக குற்றம். ஒருவருடைய தனிப்பட்ட வீடியோவை வெளியிட்டவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சீமான் கே.டி. ராகவனுக்கு ஆதரவாக பேசினார்.
அதனையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமான் பேசுவதையெல்லாம் நான் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டேன். அவரது பேச்சுக்களை எப்போதும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வேன். அவர் பாஜகவுக்கு ஆதரவாக ஏன் பேசுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று பதிலளித்தார்.

இதற்கு இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்வினையாற்றிய சீமான், என் பேச்சை சீரியஸாக எடுத்திருந்தால் இந்நேரம் திருந்திருப்பார்களே? பைத்தியகாரங்க எல்லாத்துக்கும் சிரிச்சிகிட்டே இருப்பாங்க. ரூ.100 லட்சம் கோடியில் விரைவி்ல் பிரதான் மந்திரி கதிசக்தி திட்டம் அறிவிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று கூறும் நீங்கள்

ஜிஎஸ்டி மூலமாக எடுத்து சென்ற மாநில வரிகளை ஏன் திரும்ப கொடுக்கவில்லை? அதை கேட்டால் அவ்வளவு நிதி வளமை இல்லை என்று நிதி அமைச்சர் கூறுகிறார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு கேட்டால், தனியார் நிறுவனங்கள் அரசின் மேல் உள்ள நம்பிக்கை இழந்துவிடும் என ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். இது யாருக்காக கொண்டு வந்த சட்டம்? இத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இதை சீரியஸாகா எடுத்துக்கொள்ளாமல் என் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று அண்ணாமலை கூறினால் அதை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது? என கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment

Post Top Ad