Ind vs Eng: பந்த என்கிட்ட கொடு தல…இவங்கள நான் பாத்துக்கிறேன்: கோலியிடம் கேட்டு வாங்கிய பௌலர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

Ind vs Eng: பந்த என்கிட்ட கொடு தல…இவங்கள நான் பாத்துக்கிறேன்: கோலியிடம் கேட்டு வாங்கிய பௌலர்!

Ind vs Eng: பந்த என்கிட்ட கொடு தல…இவங்கள நான் பாத்துக்கிறேன்: கோலியிடம் கேட்டு வாங்கிய பௌலர்!



நான் பந்துபோட விரும்புகிறேன் என கோலியிடம் ஒரு பௌலர்கள் அடம்பிடித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் மூன்று போட்டிகள் நடந்து முடிந்த இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்த நிலையில், அடுத்து நான்காவது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா 191/10 ரன்கள் மட்டுமே அடித்தது.
அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 290/10 ரன்கள் அடித்ததால், 99 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது. இவர்களுக்கு திருப்பிக் கொடுக்க முடிவு செய்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 466/10 ரன்கள் குவித்து, 368 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை துரத்த திணறிய இங்கிலாந்து அணி வெறும் 210/10 ரன்கள் மட்டும் சேர்த்து, 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் அபாரம்:

குறிப்பாக, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அபாரமாகப் பந்துவீசியது. ஜஸ்பரீத் பும்ரா தொடர்ந்து 140+ வேகத்தில் பந்துவீசி மிரட்டினார். இவரது இந்த தாக்கத்தால், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒல்லி போப், ஜானி பேர்ஸ்டோ கிளின் போல்ட் ஆனார்கள். இதன்பிறகுதான், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கத் துவங்கியது. மேலும், இந்திய 80 ஓவர் முடிந்த பிறகும் புது பந்தை எடுக்காமல், தொடர்ந்து பழைய பந்திலேயே வீசி, ரிவர்ஸ் ஸ்விங் செய்து அசத்தினார்கள். இதுவும் அற்புதமான திட்டமாகப் பார்க்கப்படுகிறது.கோலி பேட்டி:

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பேசிய கோலி, பௌலர் பந்தை கேட்டு வாங்கிப் போட்டு, இரண்டு முக்கிய விக்கெட்களை கைப்பற்றிக் கொடுத்தார் எனக் கூறினார். “குழுவாக செயல்பட்டதால்தான் வெற்றிபெற முடிந்தது. எந்த ஒரு தனிநபரையும் சார்ந்து அணி இல்லை. வெற்றிபெற வேண்டும் என்பது மட்டும்தான் எங்களின் எண்ணமாக இருந்தது. லார்ட்ஸ் டெஸ்டிலும் இதேதான் கூறினேன், குழுவாக செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். தற்போதும் இதேதான் கூறுகிறேன். குழுவாக செயல்பட்டதால்தான் வெற்றி கிடைத்தது. கடைசி நாளில் வெயில்தான் தாக்கம் இருந்தது. இதனால், ஸ்பின் எடுபடும் என்பதால் ஜடேஜாவை கொண்டு வந்தோம்” எனக் கூறினார்.மேலும் பேசிய கோலி, “பந்துகள் முன்கூட்டியே நல்ல முறையில் ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இதனால், 10 விக்கெட்களையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ரிவர்ஸ் ஸ்விங் ஆவதை அறிந்த பும்ரா, அருகில் வந்து பந்தை என்னிடம் கொடுங்கள் என கேட்டு வாங்கி சிறப்பாகப் பந்துவீசினார். முக்கியமான நேரத்தில் இரண்டு முக்கிய விக்கெட்களையும் கைப்பற்றி கொடுத்தார். ரோஹித்தின் பேட்டிங் அபாரமாக இருந்தது. ஷர்தூல் தாகூர் சிறப்பாக விளையாடி இரண்டு அரை சதம் அடித்தார். தான் யார் என்பதை வெளிகாட்டியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதே உத்வேகத்துடன் கடைசி டெஸ்டையும் எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad