தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 23, 2021

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  
 
இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad