28-க்கு 35வுடன் காதல்..! லாட்ஜில் தூக்கிட்ட நிலையில் மீட்பு… நடந்தது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 1, 2021

28-க்கு 35வுடன் காதல்..! லாட்ஜில் தூக்கிட்ட நிலையில் மீட்பு… நடந்தது என்ன?

28-க்கு 35வுடன் காதல்..! லாட்ஜில் தூக்கிட்ட நிலையில் மீட்பு… நடந்தது என்ன?



புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் வேலூரைச் சேர்ந்த ஆண், பெண் இருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் வீதியில் கிரேட் கெஸ்ட் ஹவுஸ் என்கிற தனியார் விடுதி உள்ளது. நேற்று நள்ளிரவில் வேலூர் காட்பாடி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (28) என்பவர் 35 வயதுடைய பெண்ணுடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.
இன்று காலை வெகு நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது இருவரும் தூக்கிட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட இருவரும் காட்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக தங்கிவிட்டு புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் அறை எடுத்து தங்கியதாகவும், மேலும் துப்பட்டாவில்
அந்த இளைஞரும், போர்வையால் அந்தப் பெண்ணும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.மேலும், இருவரும் தற்கொலை செய்து கொண்டது குடும்பப் பிரச்சனையா ? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? என விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். புதுச்சேரியில் தங்கும் விடுதியில் ஆண், பெண் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad