திருப்பூர் வீடுகளில் வெள்ளம்: கலெக்டர் ஆஃபீசிற்கு நியாயம் கேட்டு புகுந்த மக்கள்!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் காரணமாக நியாயம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் குன்னத்தூர் அடுத்த கருமஞ்சிறை பகுதியில் மழைக்காலங்களில் குளம் நிரம்பி குடியிருப்புக்குள் மழை தண்ணீர் புகுந்து விடுவதாகவும், உடனடியாக குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த கருமஞ்சிறை ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதியானது குளத்தை ஒட்டி அமைந்துள்ளது.
மழைக்காலங்களில் குளம் நிறைந்து குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பல ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது. இது குறித்து பலமுறை பல்வேறு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இவர்களது பிரச்சினை தீரவில்லை.
No comments:
Post a Comment