பாஜகவில் நண்பர்கள் இருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்!
பாஜகவில் நண்பர்கள் இருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நையாண்டி செய்துள்ளது
ஐஐஎஃப்எல் நிறுவனம் 2021ஆம் ஆண்டுக்கான ஆசிய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள்ளது. கவுதம் அதானி குடும்பம்ரூ.5.05 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2ஆம் இடம் பிடித்துள்ளது. நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி அளவில் அளவில் அவருடைய குடும்பம் வருமானம் ஈட்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டில் ரூ.1.40 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கோடீஸ்வரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் அதானி இருந்தார். தற்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.5.05 லட்சம் கோடியாக உயர்ந்து 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கொரோனாவால் பொதுமக்கள் பலரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்ததை சுட்டிக்காட்டி பலரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் இதனை விமர்சித்துள்ளது.முன்னதாக, நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment