முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, October 28, 2021

முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!முன்னாள் எம்எல்ஏ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நன்மாறன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து நன்மாறன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முன்னாள் எம்எல்ஏ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நன்மாறன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

எளிமை பண்பாடும் அயராத உழைப்பாலும் அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர் நன்மாறன் என்றும் இலக்கியத்தால் மேடை கலைவாணர் என பெயர் பெற்ற மதுரையின் மாணிக்கம் என்றும், என் இனிய நண்பர் நன்மாறன் அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad