நன்மாறன் மறைவுக்கு கனிமொழி எம்பி. இரங்கல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, October 28, 2021

நன்மாறன் மறைவுக்கு கனிமொழி எம்பி. இரங்கல்

நன்மாறன் மறைவுக்கு கனிமொழி எம்பி. இரங்கல்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நன்மாறன் மறைவையொட்டி
கனிமொழி
எம்பி.

இரங்கல் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நன்மாறன். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருப்பதால் தனக்கு வசிக்க வீடு வழங்கவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். இது சம்மந்தமாக அப்போது ஊடகங்களில் செய்தி வெளியானது.


இந்நிலையில் இப்போது நன்மாறன் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் இன்று இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நன்மாறன் மறைவுக்கு கனிமொழி எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நன்மாறன் அவர்கள் மறைவுற்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad