சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்கு முன்பதிவு தொடக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, October 13, 2021

சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்கு முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்கு முன்பதிவு தொடக்கம்!


ஐப்பசி மாதம் ஐயப்பன் கோவில்
யாத்திரை செல்வோர் தரிசனம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படுகிறது. அந்த சமயம் இந்தியா முழுதிலும் இருந்து பக்தர்கள் பலர் மாலை போட்டு, விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வருவதால் தரிசனத்திற்கு முன்பதிவு அவசியம் என சபரிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16 முதல் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு நாளை 25 ஆயிரம் பேரை தரிசனத்திற்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தரிசனத்திற்கு விண்ணப்பிப்போர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது ஆர்டிபிசிஆர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad