என் பிறந்தநாள் முக்கியமில்ல.. நிவாரண பணிகளை கவனிங்க! – தொண்டர்களுக்கு கே.என்.நேரு வலியுறுத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 8, 2021

என் பிறந்தநாள் முக்கியமில்ல.. நிவாரண பணிகளை கவனிங்க! – தொண்டர்களுக்கு கே.என்.நேரு வலியுறுத்தல்!

என் பிறந்தநாள் முக்கியமில்ல.. நிவாரண பணிகளை கவனிங்க! – தொண்டர்களுக்கு கே.என்.நேரு வலியுறுத்தல்!


தமிழகமெங்கும் கனமழை பெய்து வரும் நிலையில் தொண்டர்கள் வெள்ளி நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் கே.என்.நேரு “கழக தோழர்களுக்கு வணக்கம், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் வரும் 9-ஆம் தேதியன்று எனது பிறந்தநாளை கொண்டாட நான் விரும்பவில்லை. அதற்கு கைம்மாறாக கழகத்தினர் அனைவரும் தொடர்ந்து வெள்ள நிவாரணப் பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad