அணையை திறந்தது கேரள அமைச்சர் இல்லை.. நம்மாட்கள்! – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 8, 2021

அணையை திறந்தது கேரள அமைச்சர் இல்லை.. நம்மாட்கள்! – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

அணையை திறந்தது கேரள அமைச்சர் இல்லை.. நம்மாட்கள்! – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

முல்லை பெரியாறு அணையை கேரள அமைச்சர் திறந்ததாக வெளியாக சர்ச்சை குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு கேரள அரசுக்கு அடிபணிந்து விட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த அக்டோபர் 29ம் தேதி முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டது. இந்நிலையில் அணையை கேரள அமைச்சர் திறந்து வைத்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் “கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முல்லை பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறை அலுவலர்களாலேயே திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் அணையை பார்வையிட்டார்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad