நானே வருவேன்... பொதுச்செயலாளர் சசிகலா பெயரில் வந்த கடிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 6, 2021

நானே வருவேன்... பொதுச்செயலாளர் சசிகலா பெயரில் வந்த கடிதம்!

நானே வருவேன்... பொதுச்செயலாளர் சசிகலா பெயரில் வந்த கடிதம்!

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரை சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
 
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரை சசிகலா பயன்படுத்தக்கூடாது என அதிமுக தலைவர்கள் எச்சரிக்கை செய்து இருந்தும் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் மீண்டும் ஒரு கடிதத்தை சசிகலா தொண்டர்களுக்கு எழுதி உள்ளார். அதில், என்னை நேசிக்கும் அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், தாங்கள் வாழுகின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள். 
 
தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவர்களது, வாழ்வாதாரத்தை இழந்துவிட்டவர்களுக்கும், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன், என சசிகலா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad