ஜனவரி 1 முதல் ஆம்னி பஸ், ஓலா, ஊபர் பயணக் கட்டணம் உயருகிறது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 27, 2021

ஜனவரி 1 முதல் ஆம்னி பஸ், ஓலா, ஊபர் பயணக் கட்டணம் உயருகிறது?

ஜனவரி 1 முதல் ஆம்னி பஸ், ஓலா, ஊபர் பயணக் கட்டணம் உயருகிறது?


ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் பயணக் கட்டணங்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளதால், ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள், ஓலா, ஊபர் டாக்சி மற்றும் ஆட்டோக்களில் பயணக் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய அரசு சில அதிரடி மாற்றங்களை அண்மையில் மேற்கொண்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

இவற்றில் முக்கியமாக ஆன்லைன் வாயிலாக முன்புதிவு செய்யப்படும் அனைத்து விதமான பயண டிக்கெட்களுக்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

அதாவது இதுநாள்வரை, முதல்வகுப்பு மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகள், ஏசி பேருந்துகளுக்கான பயணக் கட்டணத்துடன் மட்டும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏசி வசதியில்லாத சாதாரண ஆம்னி பேருந்துகள், ஓலா, ஊபர் கார் மற்றும் ஆட்டோக்களில் முன்பதிவு முறையில் பெறப்படும் அனைத்து பயணக் கட்டணங்கள் மீதும் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

இதன் விளைவாக ஆம்னி பேருந்துகள், ஓலா, ஊபர் டாக்சி மற்றும் ஆட்டோ கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டது. அதாவது ஓலா, ஊபர் சேவைகளில் தற்போது எவ்வளவு கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றார்களோ அதனை கணக்கீட்டு மட்டும் பயணிகள் பயண கட்டணம் செலுத்தி வந்தனர். இனி பயணக் கட்டணத்துக்கேற்ப அதனுடன் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.

என்னதான் அரசுப் பொது போக்குவரத்து இருந்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் வெளிமாவட்டத்தினர், பொங்கல பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணிக்க ஆம்னி பேருந்துகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.

இதேபோன்று மருத்துவமனை, திருமண விழாக்கள் போன்றவற்றுக்கு செல்ல தனிநபர் குறிப்பாக மூத்த குடிமக்கள ஊபர், ஓலா டாக்சி மற்றும் ஆட்டோ போக்குவரத்தையே சார்ந்துள்ளனர்.

நிலைமை இப்படியிருக்க, அனைத்து முன்பதிவு பயண டிக்கெட்டுகள் மீதும் 5% ஜிஎஸ்டி என்ற மத்திய அரசின் முடிவால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad