"ஓமைக்ரான்".. 100 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது.. மீண்டும் ரிப்பீட் ஆகுமா?
ஓமைக்ரான் பரவல் மூலம் இந்தியாவில் விரைவில் கொரோனாவைரஸ் பரவல் முடிவுக்கு வரும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பரவிய ஸ்பானிஷ் ப்ளூ பரவலுக்கும், இப்போதைய கொரோனா பரவலுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே அப்போது நடந்தது போல இப்போதும் ஓமைக்ரான் பரவல் மூலம் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மட்டுப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1928ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்த வைரஸ் ஸ்பானிஷ் ப்ளூ. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவல் மும்பையிலிருந்து தொடங்கி நாடு முழுவதும் பரவி கிட்டத்தட்ட 2 கோடி பேரின் உயிரைப் பறித்தது.
தற்போது இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவைரஸ் பரவலுக்கும், 100 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் பாதிப்புக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இரண்டுமே வைரஸுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பரவலைக் கொண்டிருந்ததாக அவர்கள் சொல்கிறார்கள்.
ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் இந்தியாவைப் பொறுத்தவரை 2 அலைகள் இருந்தது. இதில் முதல் அலை மைல்டாக இருந்தது. ஆனால் 2வது அலையில்தான் மிகப் பெரும் உயிரிழப்பை நாடு சந்தித்தது. கொரோனாவும் அப்படித்தான். முதல் அலையில் பெரிதாக உயிரிழப்பு இல்லை. ஆனால் 2வது அலையில் நாடு சந்தித்த அவலத்தை அனைவரும் அறிவோம்.
ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் 2 ஆண்டுகள் வரை இந்தியாவில் வெறியாட்டம் போட்டது. அதன் பிறகு அது மட்டுப்பட்டு அப்படியே மறைந்து போய் விட்டது. 3வது அலையும் கூட அப்போது வந்தது என்றாலும் கூட பெரிதாக பாதிப்பு இல்லை. சாதாரண சளி காய்ச்சலோடு அது நின்று விட்டது. இதேபோல இப்போது கொரோனாவைரஸின் வேகத்தை மட்டுப்படுத்தும் வகையில்தான் ஓமைக்ரான் வந்துள்ளதாக பலரும் சொல்கிறார்கள்.
ஸ்பானிஷ் ப்ளூ பரவலுடன் ஒப்பிடும்போது அப்போது நடநத்தது போலவே இப்போதும் ஓமைக்ரான் பரவல் மூலம் கொரோனாவைரஸ் கட்டுக்குள் வந்து நீர்த்துப் போய் விடும் என நிபுணர்கள் நம்புகிறார்கள்.
ஓமைக்ரான் அறிகுறிகளும் கூட மைல்டாகவே உள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை பலருக்கு ஏற்படவில்லை. மிக மிக சாதாரண அறிகுறிகளே ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கூட ஓமைக்ரான் மூலம் கொரோனாவின் கோர தாண்டவம் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் டாக்டர் சந்தீப் புத்திராஜா அளித்துள்ள ஒரு பேட்டியில், ஸ்பானிஷ் ப்ளூவும் சரி, கொரோனாவைரஸும் சரி ஒரே மாதிரியான மரபணு மாற்றத்தைக் கொண்டுள்ளன. ஸ்பானிஷ் ப்ளூ வைரஸின் தீவிரம் 2 ஆண்டுகளில் மட்டுப்பட்டு விட்டது. அதேபோலத்தான் தற்போது கொரோனாவைரஸும் வலுவிழந்து வருவதாக நாங்கள் கருதுகிறோம்.
இரண்டு பரவலுக்கும் இடையிலான ஒரே வேற்றுமை என்னவென்றால் அப்போது நம்மிடையே தடுப்பூசி கிடையாது. ஆனால் இன்று நிறைய தடுப்பூசிகள் உள்ளன என்பதுதான். மேலும் அப்போது இந்த அளவுக்கு வெளிநாட்டு பயணமும் இருக்கவில்லை. ஆனால் இப்போது நிறைய வெளிநாட்டுத் தொடர்புகள் இருப்பதால்தான் பாதிப்பு அதிகம் இருந்தது என்றார். ஓமைக்ரான் பரவல் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்டமிக் நிலையை எட்டும் என்றும் அவர் கணிக்கிறார்.
தொடர்ந்து ஓமைக்ரான் இதேபோல செயல்பட்டால் உலகம் முழுவதும் கொரோனா பேரிடர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் டாக்டர் புத்திராஜா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment