சுரங்கத்தில் நிலச்சரிவு: ஒருவர் பலி - 100 பேரின் கதி?
சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், 100 பேர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், கச்சின் மாகாணத்தில் உள்ள பகாந்த் பகுதியில் பச்சைக் கற்கள் வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைந்துள்ளது. இந்தச் சுரங்கத்தில் இன்று வழக்கம் போல் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென மண் சரிந்து சுரங்கத்தில் விழுந்து மூடியது.
இந்த விபத்தில் சுரங்கத்தில் 100 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு விரைந்த மீட்பு படையினர் 25 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒருவர் உயிரிழந்துள்ளதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சீனாவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் இந்த பச்சை கற்கள் சுரங்கத்தில், குறைந்த சம்பளத்தில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment