டெல்லி கிளம்பியது மறைந்த 13 ராணுவ வீரர்களின் உடல்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 9, 2021

டெல்லி கிளம்பியது மறைந்த 13 ராணுவ வீரர்களின் உடல்கள்!

டெல்லி கிளம்பியது மறைந்த 13 ராணுவ வீரர்களின் உடல்கள்!

13 பேரின் உடல்களும் சூலூரிலிருந்து சி - 130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியது. 

ஊட்டி அருகே குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இன்று 13 ராணுவ வீரர்கள் உடலும் சூலூர் விமானப்படை தளம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து டெல்லி புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சூலுார் விமானப்படை தளத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் சூலூரிலிருந்து சி - 130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியது. மேலும் இன்று மாலை டெல்லியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad