அமைச்சர் சி வி கணேசனின் மனைவி மரணம்! திமுகவினர் இரங்கல்!
திமுகவைச் சேர்ந்த அமைச்சர் சி வி கணேசனின் மனைவி பவானி உடல் நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் திட்டக்குடி
எம் எல் ஏவும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருப்பவர் சி வி கணேசன். இவரின் மனைவி பவானி இன்று உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் நான்கு மகள்கள் உட்பட 5 குழந்தைகள். அமைச்சரின் மனைவி இறப்புக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment