14-ல் 13 பேர் பலி; உடலை அடையாளம் காண DNA சோதனை!
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல்.
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து
குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்ற போது காட்டேரி மலைப்பாதை பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். இதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது.
ஆம், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் கருகியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரை டிஎன்ஏ சோதனை
மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment