பெட்ரோல் விலை 177 ரூபாய்.. இனி மாட்டு வண்டிதான் கரெக்ட்.. கதறும் வாகன ஓட்டிகள்!
இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 177 ரூபாயை தொட்டுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடி மோசமடைந்துள்ளதால் இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 177 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு பயங்கரமாக குறைந்துள்ளதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இலங்கையில் இருந்த ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் டாலர் நெருக்கடி காரணமாக மூடப்பட்டுவிட்டது.
ஆலை மூடப்பட்டதால் சுத்திகரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ள பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. ஆனால், டிசம்பர் மாத தொடக்கத்தின்போது ஒரு மாதத்திற்கு மட்டுமே பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்யத் தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது.
இந்நிலையில் தற்போது அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக குறைந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 ரூபாய் உயர்ந்து 177 ரூபாயாக உள்ளது.
ஒரு லிட்டர் டீசல் விலை 10 ரூபாய் உயர்ந்து 121 ரூபாயாக உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெட்ரோலிய பொருட்களை வாங்க இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment