சிறுமிகளுக்கு தாலியை கட்டி கர்ப்பமாக்கிய சம்பவம்: சென்னையில் இருவர் கைது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இரண்டு சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது.
சென்னையில், 16 வயது சிறுமிகள் இருவரை வீட்டிற்கு தெரியாமல் தாலிக்கட்டி உடலுறுவு கொண்டு கர்ப்பமாக்கிய 2 பேர் போக்சோ மற்றும் குழந்தை திருமணத்தடை சட்டத்தில் கைது செய்யப்ட்டுள்ளனர்.
சென்னை , வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, விஜயகுமார் என்ற நபர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, யாருக்கும் தெரியாமல் தாலி கட்டி பலமுறை உடலுறுவு கொண்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்ததாக, சிறுமியின் தாயார் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின்பேரில், திருவொற்றியூர் AWPS காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் , புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விஜயகுமார் (28) என்பவரை கைது செய்தனர்.
பாத்ரூமில் கேமரா... கள்ளக்காதலியின் மகளை மிரட்டியே பலமுறை சல்லாபம்... தேனி கொடூரம்
இதேபோல, அதே வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் மற்றொரு 16 வயது சிறுமியை அசோக்குமார் என்பவர் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி யாருக்கும் தெரியாமல் கோயிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டியுள்ளார். பின்னர் சிறுமியிடம் உடலுறுவு கொண்டதால், சிறுமி கர்ப்பமடைந்ததாக, சிறுமியின் தாயார் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை செய்து அசோக் குமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விஜயகுமார் மற்றும் அசோக் குமார் ஆகிய இருவரும் நேற்று ( 21.12.2021 ) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment