பாடநூல் அச்சடிக்கும் பணி: முதல்வருக்கு முக்கிய கோரிக்கை!
தமிழ்நாட்டு அச்சு நிறுவனங்களுக்கு பாடநூல் அச்சிடும் பணியை தர வலியிறித்தி கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாட நூல் அச்சிடும் பணியை தமிழ்நாட்டைச் சோந்த அச்சு நிறுவனங்களுக்கே வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பாடநூல் கழகம் மாணவா்களுக்கான பாடநூல்களை அச்சிட்டு வருகிறது. இந்த பாடநூல்கள் அச்சிடும் பணியை கடந்த அதிமுக ஆட்சியில் சா்வதேச ஒப்பந்தம் மூலம் வெளி மாநிலங்களுக்கு வழங்கியது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள புத்தகம் அச்சிடும் நிறுவனங்களும், பைண்டிங் செய்யும் நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கரோனா மற்றும் பொது முடக்கத்தால் தமிழகத்தின் அச்சுத் தொழில் மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாநிலங்களில் பாடநூல் அச்சிடும் பணி
அந்தந்த மாநில அச்சகங்களுக்கே வழங்கப்படும் போது, தமிழகத்தில் மட்டும்தான் புத்தகங்கள் அச்சிடும் பணியில் பிற மாநில நிறுவனங்களும் பங்கேற்க முடியும் என்ற விதி உள்ளது. இந்த விதியை ரத்து செய்து தமிழ்நாடு பாடநூல் புத்தகங்களை அச்சடிக்கும் பணியை தமிழக நிறுவனங்களுக்கே வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு புத்தகம் அச்சிடுவோா் மற்றும் பைண்டா்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
எனவே, முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிடும் பாடநூல்கள் அச்சிடும் பணி அனைத்தையும் தமிழக அச்சக நிறுவனங்களுக்கே வழங்கிட வேண்டும்” என்று கூறியுள்ளாா்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக இருக்கும் திண்டுக்கல் லியோணி டிசம்பர் 7ஆம் தேதி இதே கருத்தை வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டார்.
“டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழை கட்டாயப் பாடமாக்கிய முதல்வர்க்கு வாழ்த்துக்கள்.அதேபோல் தமிழ்நாடு பாடநூல் நிறுவன பாடநூல் அச்சடிக்கும் பணியினை மற்ற மாநில பிரின்டர்ஸ் செய்து வருகின்றனர் இனி தமிழக பிரின்டர்ஸ்க்கு மட்டும் பணி வழங்க மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் முயற்சி செய்து வருகிறேன்” என்று அதில் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment