புத்தாண்டு ஏன் ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது தெரியுமா? இதான் அதன் வரலாறு...
புத்தாண்டு ஏன் ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது தெரியுமா? இது குறித்த முழு வரலாற்றை கீழே படியுங்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஜன 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிறோம் 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டாக தற்போது உலகமே கொண்டாடி வருகிறது. இந்த புத்தாண்டிற்கு பின்னால் உள்ள வரலாறு உங்களுக்கு தெரியுமா? எப்படி ஜனவரி 1ம் தேதி புத்தாண்டாக மாறியது? எத்தனை ஆண்டுகளாக இந்த புத்தாண்டு ஜன 1ம் தேதி கொண்டாடப்படுகிறது என தெரியுமா? வாருங்கள் காணலாம்
எத்தனை ஆண்டுகளாக புத்தாண்டு ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது என கேட்டால் பலர் 2022 ஆண்டுகள் என சொல்லுவார்கள். அதாவது கி.மு, கி.பி என்ற கணக்கை வைத்து கிறிஸ்து பிறப்பிற்கு பிறகு தான் புத்தாண்டு கொண்டாடப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயேசுவிற்கு முன்பே புத்தாண்டு
ஆனால் இயேசு பிறப்பிற்கு முன்பே ஜனவரி மாதம்தான் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. கி.மு 45ம் ஆண்டு முதல் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இது குறித்த வரலாற்றை தான் இங்கு காணப்போகிறோம்.
கி.மு 45ம் ஆண்டு
பின்னர் ஜூலியஸ் சீசர் ஆட்சிக்கு வந்த போது சோஸிஜீனஸ் என்ற ஒரு வான்வெளி ஆராய்ச்சியாளரை சந்தித்து இந்த கால அளவு கணக்கீடு குறித்து பேசினார். அப்பொழுதுதான் அவர் சூரியனை மையமாக கொண்டு பூமி சுற்றுவது குறித்தும், சூரியனை மையமாக வைத்தே காலத்தை கணக்கிட வேண்டும் என விளக்கினார். இது சரி என ஜூலியஸிற்கு பட்டது.
365.25 நாட்கள்
அப்படியாக அவர்கள் பூமி சூரியனை சுற்றி வர ஆகும் அளவை பார்க்கும்போது 365.25 நாட்கள் ஆகிறது என்பதை கணக்கிட்டனர். அதனால் அவர்கள் இதுவரை இருந்த காலத்தை ஒரளவு கணக்கிட்டு தாங்கள் ஏற்கனவே கணித்த கணித் முறையில் 67 நாட்கள் பின் தங்கி வாழ்ந்து வருவதை உணர்ந்தனர்.
12 மாதங்கள்
பின்னர் கி.மு 46ம் ஆண்டாக மாற்றினர். (அன்றைய கணக்கீட்டை இன்றைய கணக்கீட்டுடன் ஒப்பிட்டு கி.மு 45-46 என உங்களுக்கு தருகிறோம் ) அப்பொழுது தான் ஜனவரி மாதத்தை புத்தாண்டாக கொண்டாட துவங்கினர். அப்பொழுது தான் ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கீடு வந்தது.
லீப் வருடம்
ஒரு ஆண்டிற்கு ஜூலியன் குழுவின் கணிப்பின் படி 365.25 நாட்கள் என்ற நிலையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் மாறும் என கருதினர். இதனால் அவர்கள் 365 நாளை ஒரு வருடமாக கணக்கிட்டு மீதமுள்ள 0.25 என்ற நாளை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் இயர் என கருதி பிப்ரவரி மாதம் வழக்கமான நாட்களை விட ஒரு நாள் அதிகமாக வைத்து கணக்கை சமன் செய்தனர்.
கிறிஸ்து பிறப்பு
அப்பொழுது முதல் லீப் இயர் என்ற வழக்கம் நம்மில் வந்துவிட்டது. இது எல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, நடந்தது. இப்படியாக நாட்கள், நேரம், காலம் எல்லாம் முடிவு செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான கால, நேர கணக்கீடுகள் பின்பற்றப்பட்டன.
கிறிஸ்து பிறப்பு வருட கணக்கீடு
இந்நிலையில் அதை சீர் படுத்த பிற்காலத்தில் கிறிஸ்து பிறந்த காலத்தை துவங்கி வருடங்களை கணக்கிட துவங்கினர். அதுவே ஆங்கில வருட கணக்கீடாக மாறிவிட்டது. இந்த ஆங்கில வருட கணக்கீடு தான் இன்று உலகம் முழுவதும் உள்ள எல்லா நாடுகளிலும் பொதுவான கணக்கீடாக வருகிறது.
மீண்டும் குழப்பம்
இந்த கணக்கீட்டு முறையில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குழப்பம் வந்தது. அதவாது 1570ம் ஆண்டு ரோம் சர்ச்சில் இந்த கால கணக்கீடு குறித்து ஒரு விவாதம் வந்தது ஜூலியன் ஒரு ஆண்டு என்பது 365.25 என கணக்கிட்டு ஆண்டுகளை நிர்ணயம் செய்தார். ஆனால் பூமி சூரியனை சுற்ற சரியாக எடுத்துக்கொள்ளும் காலம் என்பது 365.2421299 நாட்கள் ஆகும்.
10 நாட்களை காணவில்லை
அதாவது அவர் கணித்ததிலிருந்து ஒரு ஆண்டிற்கு 11 நிமிடங்கள் தாமதாகவே பூமி சூரியனை சுற்றுகிறது. இதையடுத்து அப்போதைய ரோம் சர்ச் நிர்வாகம் இந்த கணக்கீட்டை சரி செய்ய 1000 ஆண்டுகளை கணக்கிட்டு ஆண்டிற்கு 11 நிமிடம் என்றால் சுமார் 10 நாட்கள் நாம் முன்பாக கணக்கிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் 1582ம் ஆண்டு காலண்டரில் 10 நாட்களை அப்புறப்படுத்தப்போவதாக அறிவித்தனர்.
தொடரும் நடைமுறை
1582ம் ஆண்டு காலண்டரில் மட்டும் 365க்கு பதிலாக 355 நாட்களே இருந்தன. அதன் பின்னர் லீப் இயர் உள்ளிட்டவிஷயங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டன.
இந்நிலையில் நாம் இன்று அதே ஆங்கில கணிக்கீட்டு முறையில் தான் புத்தாண்டை கொண்டாடி வருகிறோம். இந்த கணக்கீடு உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட படியால் நம் குறிப்பிட்ட நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். இது தான் புத்தாண்டு பின்னால் இருக்கும் வரலாறு. இந்த செய்தி உங்களுக்கு புதிய செய்தியாக இருந்தால் இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் இதை பற்றி சொல்லுங்கள்
No comments:
Post a Comment