2 மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இடிமின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை!
இன்னும் ஒரு மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
கடந்த நவம்பர் மாதம் முழுவதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது
என்பதும் இதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்தவகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில்
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment