மாணவர்களிடம் பேச்சு:இரு ஆசிரியைகள் சஸ்பெண்ட்
மாணவர்களிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியைகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆபாசமாக பேசிய இரு ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்டத்திற்கு
உட்பட்ட உமையாள்புரத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் பணியாற்றும் ௨ ஆசிரியர்கள் அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பேட்டரிகளிடம் அவதூறுராக பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஏற்கனவே தலைமை ஆசிரியர் அவரை எச்சரித்துள்ளார். ஆனால் மீண்டும் அவர் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இந்நிலையில் சிஇஓ முருகன் புகாருக்குள்ளான இரு ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவர்களிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியைகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment